விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக அஜித் ரசிகர்கள் செய்த அழகான செயல்- வைரல் புகைப்படம்
விஜய்யின் பீஸ்ட் கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் பேசிக்கொண்டிருந்த ஒரு திரைப்படம். படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
வழக்கமான கொண்டாட்டத்தை போட்டு ரசிகர்கள் படத்தை வரவேற்றுள்ளார்கள். பீஸ்ட் படக்குழுவினரும் படத்தை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து வருகிறார்கள்.
முதல் பாதி முடிய படம் முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டமாக இருக்கிறது.
இந்த நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஒரு பேனர் வைத்துள்ளனர். அதில் இரண்டு நாயகர்களின் புகைப்படங்கள் வைத்து அவர்கள் எப்போதும் கூறும் வசனங்களை எழுதி அழகாக பீஸ்ட் படத்திற்காக வைத்துள்ளனர்.
எப்போதும் சண்டை போடும் ரசிகர்களின் செயலுக்கு நடுவில் இப்படி ஒற்றுமை பாராட்டும் விதமாக ரசிகர்கள் வைத்திருக்கும் பேனர் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அவர்கள் வைத்த பேனரின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
