அஜித் ரசிகர்களுக்காக முன்னணி தியேட்டர் செய்த விஷயம்! உலகத்திலேயே முதல் முறையாம்..
அஜித்தின் வலிமை படம் ரிலீஸ் ஆக இன்னும் குறைந்த நாட்களே இருக்கின்றன. படத்தினை கொண்டாட அஜித் ரசிகர்கள் அதிக அளவில் தியேட்டருக்கு வருவார்கள் என்பதால் அதற்காக பல ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகிணியில் அஜித் ரசிகர்களுக்காக Fan Exhibit ஒன்றை வைத்திருக்கின்றனர். I லவ் AK என இருக்கும் எழுத்துக்கள் முன்பு நின்று அஜித் பேன்ஸ் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். அஜித்துக்காக முதல் முறையாக செய்யும் விஷயம் இது என அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
ஏற்கனவே மெரினாவில் 'நம்ம சென்னை' என வைக்கப்பட்டு இருப்பதற்கு முன் பலரும் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதை பின்பற்றி தான் அஜித் ரசிகர்களுக்காக ரோகிணி தியேட்டர் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறது.
World's first Fan Exhibit for one and only #Thala (a) #AK #AjithKumar at your #FansFortRohini.
— Rohini SilverScreens (@RohiniSilverScr) December 23, 2021
Post your fan moment with this iconic exhibit on instagram and tag us also #FansFortRohini to win exclusive #Valimai FDFS offers#ValimaiPongalAtRohini pic.twitter.com/6rOM6pHmVQ