வாத்தியாரே.. வலிமை வருது! அஜித் ரசிகர்கள் ஒட்டிய வித்தியாசமான போஸ்டர்

Valimai Viral Ajith Kumar Poster Ajith fans
By Parthiban.A Jan 05, 2022 08:30 AM GMT
Report

ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா மூன்றாம் அலை பற்றிய அச்சம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக பல படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் வலிமை நிச்சயம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜனவரி 13ம் தேதி வெளிவரும் என போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் வலிமை படத்தை கொண்டாட தயாராகி வரும் அஜித் ரசிகர்கள் படத்திற்காக போஸ்டர் பேனர் என வைக்க தொடங்கி இருக்கின்றனர்.

அதிலும் மதுரை ரசிகர்கள் ஒட்டி இருக்கும் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்து இருக்கிறது. மிகவும் வைரலான சார்பட்டா பரம்பரை வாத்தியார் மீம் தான் அந்த போஸ்டரில் இடம் பெற்று இருக்கிறது.

"வாத்தியாரே.. இதுதான் மதுரை தமிழ்ஜெயா தியேட்டர், ஜனவரி 13 வலிமை படம் வருது, ஏரியாவே அலப்பறையா இருக்கும்" என அதில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

 வாத்தியாரே.. வலிமை வருது! அஜித் ரசிகர்கள் ஒட்டிய வித்தியாசமான போஸ்டர் | Ajith Fans Poster For Valimai Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US