RRR படத்தை எச்சரித்து அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்
வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் அஜித் ரசிகர்கள் அதை கொண்டாட தயாராகி வருகின்றனர். பெரிய இடைவெளிக்கு பிறகு அஜித்தை திரையில் பார்க்க போகும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அது பற்றி பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் வலிமை படத்திற்காக பல்வேறு போஸ்டர்களையும் ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள். அதுவும் மதுரையில் வித்யாசமான வகையில் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தை எச்சரித்து ஒரு போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். ஜனவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகும் அந்த படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படமும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தியிலும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
இரண்டு படங்களுக்கும் போட்டி இருக்கும் என்பதால் தான் அஜித் ரசிகர்கள் இப்படி போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர்.

1️⃣2️⃣ - சீட் லித்தோ போஸ்டர் ???
— BillaBalaji (@BillaStarBalaji) December 26, 2021
அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை அஜித்குமாரின் உடமையடா????
?️ Ajith Kumar ?️ in
✌ #வலிமை ✌
? Pan India Film oF AK?
? ? ? வாழ்த்துகளுடன்? #?மே கிங் தல குரூப்ஸ் மதுரை? pic.twitter.com/Wxs2hT8YwS