அஜித்தின் மாமனார் ஒரு பாடகரா? டி எம் எஸ் குரலில் அவர் பாடி அசத்திய வீடியோ இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், தமன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
அஜித் - ஷாலினி
நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு கரம்பிடித்தார். நடிகை ஷாலினி திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டவில்லை. ஆனால், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த ஷாலினி தன்னுடைய கணவரின் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், ஷாலினியின் தந்தையும், அஜித்தின் மாமனார் குறித்து இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் மாமனார் பாட்டு பாடுவதில் திறமையானவராக இருக்கிறார்.
அஜித்தின் மாமனார்
அதிலும் குறிப்பாக மறைந்த இசையமைப்பாளரும், பாடகருமான டி எம் எஸ் குரலில் பாடல்கள் பாடி அதை youtubeல் பதிவு செய்து வருகிறார்.
இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள், இவருடைய குரல் அப்படியே டி எம் எஸ் குரல் போலவே இருக்கிறது என கூறி வருகிறார்கள். மேலும் அஜித்தின் மாமனாருக்குள் இப்படியொரு திறமை ஒளிந்து இருக்கிறதா என்றும் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
கணவரின் கொடுமை, விவாகரத்து என செய்த மின்சார கண்ணா பட நடிகை மோனிகாவின் தற்போதைய நிலை?