கார் ரேஸ் முடிந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. வைரலாகும் போட்டோ
அஜித்
நடிகர் அஜித் நடிப்பில் அடுத்து ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் எல்லாம் ரிலீஸ் ஆக டிரைலர் வருமா என்ற எதிர்ப்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளார்கள்.
படத்திற்கான வியாபாரமும் விடாமுயற்சியை விட அதிகமாக நடந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குட் நியூஸ்
படம் இன்னும் சில நாட்களில் வெளியாகப்போவதை நினைத்து ரசிகர்கள் கொண்டாட்டமாக இருக்க வேறொரு குப்பர் நியூஸ் வந்துள்ளது. அதாவது கார் ரேஸில் படு பிஸியாக இருந்த அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
விமான நிலையத்தில் ரசிகர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அஜித் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக காணப்படுகிறார். இதோ போட்டோ,