சைவத்துக்கு மாறிய அஜித்.. ரகசியத்தை உடைத்த நடிகர் ஆரவ், அதிர்ச்சி தகவல்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் மூன்று நாட்களுக்கு முன் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவருடைய இசை படத்திற்கு மாபெரும் பலத்தை கொடுத்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்துள்ளனர்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், அஜித் குமார் குறித்து பகிர்ந்த விஷயங்கள் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்திற்காக தனது உடல் எடையை குறைப்பதற்காக டயட்டில் இருந்தார்.
அதனால் அதிகமாக சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். பொதுவாக அதிகமான ருசியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் அஜித் சைவத்திற்கு தற்போது மாறிவிட்டார்" என்று கூறியுள்ளார்.