துணிவு ஷூட்டிங்கில் சிபி-க்கு அஜித் கொடுத்த கிப்ட்! என்ன தெரியுமா
அஜித்
நடிகர் அஜித்குமார் எப்போதும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்காக பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வார் என பலரும் சொல்லி கேட்டிருப்போம். அவரே கையால் சமைத்து எல்லோரையும் சாப்பிட வைப்பது உள்ளிட்ட பல விஷயங்களை அவர் செய்வது வழக்கம்.
தற்போது துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் தனக்கு கொடுத்த கிப்ட் பற்றி நடிகர் சிபி சந்திரன் பேசி உள்ளார்.

கண்ணாடி கிப்ட்
துணிவு படத்தில் அஜித் டீமில் இருக்கும் நபராக தான் சிபி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் வரும் காசேதான் கடவுளடா என்ற பாடல் நேற்று வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.
அந்த பாடல் ஷூட்டிங்கில் தான் அஜித் எனக்கு ஒரு கண்ணாடி கிப்ட்டாக கொடுத்தார் என நடிகர் சிபி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். காசேதான் கடவுளடா பாடலில் அஜித் அந்த கண்ணாடி அணிந்து தான் ஆடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Will always treasure this invaluable memorabilia. A gift from #Ajithkumar sir during #KasethanKadavulada song shoot ? https://t.co/wKUI7Wms7Z pic.twitter.com/2Q9zftqxsX
— Ciby Bhuvana Chandran (@cibychandran) December 18, 2022
துணிவு படத்தின் கதை இது தான்! ரன்டைம் விவரமும் இதோ