பிக் பாஸ் நடிகருக்கு லட்சக்கணக்கில் மதிப்புள்ள பொருளை பரிசு கொடுத்த அஜித்.. யார் அந்த நடிகர் தெரியுமா
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து வீடியோ ஒன்றை கூட படக்குழு சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.
விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி ஷங்கர், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் மூலம் அஜித்துடன் முதல் முறையாக நடிக்கிறார் ஆரவ். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால், அவை யாவும் பெரிதளவில் ஹிட்டாகவில்லை.
பரிசு கொடுத்த அஜித்
ஆனால், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவாக கலகத்தலைவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து தற்போது விடாமுயற்சியில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் மூலம் அஜித்துடன் நெருக்கமான நடிகர் ஆரவ், அவருடன் இணைந்து பைக் ரைடு கூட சென்று இருந்தனர். இந்த நிலையில், நடிகர் ஆரவ்விற்கு ரூ. 35 மதிப்பு உள்ள ரேஸ் பைக் ஒன்றை நடிகர் அஜித் பரிசாக கொடுத்துள்ளாராம். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
