நடிகர் அஜித் குமார் எடுத்த முடிவு.. மனைவி ஷாலினி வெளியிட்ட அதிரடி பதிவு

Bhavya
in புகைப்படம்Report this article
நடிகர் அஜித் குமார்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
நடிப்பை தாண்டி இளம் வயதில் இருந்தே பைக் மற்றும் கார் பந்தயங்களில் அதிக ஆர்வம் செலுத்தி வந்த அஜித், பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவருக்கு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதன் பின், சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். இந்நிலையில், அஜித் குமாரின் காதல் மனைவியான ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
வெளியிட்ட பதிவு
அதில், தற்போது அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கப் போகிறார் எனவும், அதற்காக அஜித் தனியாக ஒரு டீமையே உருவாக்கியுள்ளார்.
Formula BMW Asia, British Formula 3 மற்றும் FIA F2 உள்ளிட்ட கார் பந்தயங்களில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என்ற அறிவிப்பை வெளியிட்டு அந்த புகைப்படத்தின் கீழ் "உனக்கு பிடித்ததை நீ மீண்டும் செய்வதை பார்க்கும்போது மிகவும் மகழ்ச்சியாக உள்ளது. உனக்கும் உன் டீம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.
You May Like This Video

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
