அஜித்தின் குட் பேட் அக்லி முதல் நாளில் மட்டுமே எவ்வளவு வசூலிக்கும்... கணிக்கப்பட்ட விவரம்
குட் பேட் அக்லி
இந்த ஆண்டு 2025, ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகிறது.
அஜித்தின் விடாமுயற்சி, பிப்ரவரி மாதம் மாஸாக வெளியானது, படமும் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை தொடர்ந்து அஜித் செம வேகத்தில் நடித்து முடித்த திரைப்படம் குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்துடன் இந்த படத்திலும் நாயகியாக நடித்தார் த்ரிஷா. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி அதாவது நாளை ரிலீஸ் ஆகவுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாள் படத்தின் டிக்கெட் புக்கிங் அமோகமாக நடந்து வருகிறது. காலை முதல் இரவு நேர காட்சிகள் வரை அனைத்து இடங்களிலும் நிரம்பியுள்ளனவாம்.
முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 35 கோடி வரை ஓபனிங் வசூல் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் குட் பேட் அக்லி திரைப்படம் அதிகபட்சமாக 60 முதல் 70 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.