கண்டிப்பாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை.. அஜித்தின் குட் பேட் அக்லி படம் பார்த்த பிரபலத்தின் விமர்சனம்
குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் என பலர் நடிக்க வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் படம் குட் பேட் அக்லி.
தமிழ்நாடு முழுவதும் எந்த ஒரு பட போட்டியும் இல்லாமல் சோலோவாக 900 திரையரங்குகளுக்கு மேல் வெளியாக உள்ளது.
விமர்சனம்
படம் ரிலீஸ் தேதியை நெருங்கிவரும் நிலையில் படம் குறித்த விஷயங்களும் நிறைய வந்துகொண்டே உள்ளன.
சமீபத்தில் ப்ரீமியர் ஷோ ஒளிபரப்பாக இருந்ததாகவும் ஆனால் தற்போது அது கேன்சல் ஆனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் விமர்சனம் குறித்து திருச்சி ஸ்ரீதர் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகிறது.
அதில் அவர், மலேசியாவில் சமீபத்தில் நண்பர் ஒருவர் குட் பேட் அக்லி படத்தில் சென்சார் காட்சியை பார்த்தார். அந்த படம் அஜித்தின் சிட்டிசன், தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட படங்களின் கலவையாக இருப்பதாகவும், ரசிகர்களை மிகவும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்.
படம் வெளியானால் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை உறுதி என்று திருச்சி ஸ்ரீதர் கூறியுள்ளார்.