அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான புது அப்டேட்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 63 - வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
புது அப்டேட்
இந்நிலையில், படம் குறித்து ஒரு அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் ஸ்பெய்னில் நடத்தப்பட்டு வந்தது.
அந்த படப்பிடிப்பு காட்சிகள் முடிக்கப்பட்டு அடுத்தக்கட்ட காட்சிகள் பல்கேரியாவில் நடைபெற்று வருவதாகவும் அதன் பின், படக்குழு இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
