அஜித்தை அசிங்கப்படுத்திய வடிவேலு.. பிரபலம் போட்டுடைத்த டாப் ரகசியம்
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் தற்போது வலம் வருபவர் அஜித். பல கோடி ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்படும் இவர் முன்னணி நடிகராக இன்றும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வலம் வர முக்கிய காரணம் இவருடைய பணிவான குணம் தான்.
இருப்பினும் தல உட்பட தனக்கு எந்த டைட்டிலும் வேண்டாம் என ஏற்கனவே அவர் அறிவித்துவிட்டார். கடவுளே அஜித்தே என சமீப காலமாக ட்ரெண்ட் ஆன ஒரு விஷயத்தையும் அவர் உடனே நிறுத்தும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்.
டாப் ரகசியம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்தும் ராஜா படத்தில் நடந்தவை குறித்தும் தயாரிப்பாளர் பாலாஜி பகிர்ந்துள்ளார். அதில், "வடிவேல் மற்றும் அஜித் இருவரும் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்."
ஆனால் ராஜா படத்தில் இவர்கள் இணைந்து நடித்தபோது வடிவேல் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை இங்கே வாடா, அங்கே போடா என்று பலமுறை ஒருமையில் அழைத்தார்.
இதனை கேட்டு ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த அஜித் இயக்குனரிடம் இது குறித்து பேசினார். அப்போது இயக்குனர் வடிவேலை அழைத்து உங்கள் வார்த்தைகள் ஹீரோவுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின், அஜித் அவர் நடிக்கும் படங்களில் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்ததில்லை.
"ஆனால், இது போன்று ரஜினி கிடையாது அந்த காலத்தில் ட்ரெண்டிங்கில் எந்த நடிகர் இருக்கிறார்களோ அவர்களை படத்தில் சேர்த்து கொண்டு நடிப்பார், அதுதான் ரஜினியின் கேரக்டர்" என்று கூறியுள்ளார்.