பத்திரிக்கையாளர் வீட்டிற்கு சென்ற அஜித், என்ன செய்தார் தெரியுமா?- யாருக்கும் தெரியாத சம்பவம்
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம். ஆனால் அவர் எப்போதுமே தான் ஒரு பெரிய நடிகர் என்பதை காட்டிக் கொள்ளவே மாட்டார்.
வெளியே எங்கு வந்தாலும் சாதாரணமாக மக்களோடு மக்களாக பயணிப்பார், அதற்கு உதாரணமாக ஓட்டு போடும் விஷயத்தை கூறலாம்.
பத்திரிக்கையாளர் செய்யாறு பாலா, அஜித்தை பேட்டி எடுக்க சென்றபோது ஒரு விஷயம் நடந்துள்ளது, அதை இப்போது பகிர்ந்துள்ளார்.
நான் பேட்டி எடுக்க சென்றபோது நடந்து வந்தேன் என்பதை தெரிந்துகொண்ட அவர் வீட்டின் உள்ளே சென்று ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு வெள்ளை ஹெல்மேட் எடுத்துக் கொண்டு ரேஸ் பைக்கை கொண்டு வந்து நிறுத்துகிறார்.
வாங்க என்கிறார், நான் தயக்குகிறேன், பின் பைக் ரேஸில் ஏற செம வேகமாக செல்கிறார். நான் என் வீட்டிற்கு போவதற்கு சில இடங்களிலேயே நிறுத்த கூறுகிறேன், அவர் எங்கேயும் நிறுத்தாமல் எனது ரூமிற்கு கொண்டு சென்று இறக்கினார்.
இந்த விஷயம் 96ம் வருடத்தில் நடந்தது, இது எதற்கு கூறுகிறேன் என்றால் பண்பு என்று இருக்கிறது, இப்போதும் அவர் அப்படியே இருக்கிறார் என கூறியுள்ளார்.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri