தன்னை பற்றி தவறாக எழுதியவரின் உயிரை காப்பாற்றிய அஜித்.. இப்படியொரு மனிதரா
நடிகர் அஜித் செய்த உதவி
தமிழ் சினிமாவில் முக்கிய, முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவரை பற்றி தெரியாத பல விஷயங்கள் அவ்வப்போது வெளிவரும். அந்த வரிசையில் தற்போது இவர் செய்து மாபெரும் உதவி குறித்து தெரியவந்துள்ளது.
நடந்த விஷயம் :
அஜித்தை பற்றி பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தொடர்ந்து தவறான முறையில் பத்திரிகையில் எழுதி வந்துள்ளார். அந்த பத்திரிகையாளர் ஒரு முறை அஜித்தை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அஜித்தை சந்தித்த விட்டு அந்த பத்திரிகையாளர் புறப்படும் சமயத்தில், 'எங்க போறீங்க' என்று அஜித் கேட்டுள்ளார்.
அதற்க்கு 'நான் இதய மருத்துவரை சந்திக்க செல்கிறேன். ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முன் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்தது. ஆனால், என்னிடம் பணம் இல்லாத காரணத்தினால் வெறும் மாத்திரை மட்டும் வாங்கி போட்டு வருகிறேன். அதற்காக தான் தற்போது மருத்துவரை சந்திக்க மாத்திரை வாங்க செல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இப்படியொரு மனிதரா
இதன்பின் உடனடியாக அந்த மருத்துவருக்கு அஜித் போன்கால் செய்து, அந்த பத்திரிகையாளருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள். அந்த சிகிச்சைக்கான பணத்தை நான் காட்டிவிடுகிறேன் என்று அஜித் கூறினாராம்.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு முன் அந்த பத்திரிகையாளரின் வீட்டிற்கு நேரில் அஜித் சென்று, 6 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும், 6 மாதத்திற்கான வீட்டு செலவிற்கு பணத்தையும் கொடுத்துள்ளார். ஏனென்றால், அவருடைய சிகிச்சை முடிந்த மீண்டும் பழையபடி வேலைக்கு செல்ல எப்படியும் 6 மாதம் ஆகிவிடும். அதனால் தான் இந்த ஏற்பாடு என்று அஜித் கூறினாராம்.
தமிழ் சினிமாவில் அடுத்தவன் எப்போது கிழே இறங்குவான், நாம் எப்போது மேலே போவோம் என்று என்னும் பலரின் மத்தியில், இப்படியொரு நடிகரும் இருக்கிறார் என்பதற்கு அஜித் மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டு.