மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் செய்த உதவி- வெளிவந்த தகவல்
மிக்ஜாம் புயல்
சென்னை மக்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசும், தனியார் நிறுவனங்களும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் உதவிகள் செய்து வருகிறார்கள்.
பிரபலங்கள், அரசு, தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர்.
அதேபோல் பிரபலங்களில் சூர்யா-கார்த்தி, ஹரிஷ் கல்யாண் என நிதி உதவி செய்ய, விஜய் ரசிகர்கள், நடிகர் பார்த்திபன் ஆகியோர் ரோட்டில் இறங்கி உணவுகளை வழங்கி வருகிறார்கள்.
அஜித் உதவி
இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித் ஒரு உதவியும் செய்யவில்லை என கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அஜித் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் தனது நண்பர்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்து வருகிறாராம்.
இந்த தகவல் தற்போது வெளியாக ரசிகர்கள் அஜித் எப்போதும் தான் செய்யும் விஷயங்கள் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என நினைக்க மாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகிறார்கள்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
