மாஸ்கோவில் நடிகர் அஜித்.. ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்..
தல அஜித் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிப்பில் தயாராகி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, விஜய் டிவி புகழ் என பலர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் மோஷன் போஸ்டர், மற்றும் முதல் பாடல் வெளியானது. இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாவதற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள, மாஸ்கோவில் தனது ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
