விஜய்யின் பீஸ்ட் புரொமோ வீடியோவில் அஜித்- அட ரசிகர்களே இதை எத்தனை பேர் கவனித்தீர்கள்?
விஜய்யின் பீஸ்ட் படம் சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்புகள் சென்னை, டெல்லி, வெளிநாடு என மாற்றி மாற்றி நடக்கிறது. சென்னையில் பிரம்மாண்டமாக போடப்பட்ட மால் செட் புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்கள் பிரம்மித்து போனார்கள்.
நீண்ட நாட்களாக பீஸ்ட் பட அப்டேட் கிடைக்காத ரசிகர்களுக்கு நேற்று ஒரு சந்தோஷ செய்தி வந்தது. அதாவது படத்தில் இடம்பெறும் அரபி குத்து பாடல் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
அறிவிப்பு வந்த புரொமோ வீடியோவில் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் ஆகியோர் இருந்தார்கள். அனிருத் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் அவர் விவேகம் படத்திற்காக வாங்கிய விருது ஒன்று இருந்தது.
அதில் அஜித் ஸ்டில் இருக்க விஜய்யின் பீஸ்ட் வீடியோவில் அஜித் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.