நந்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா கிடையாது! வேறு யார் தெரியுமா
நந்தா
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி 2001ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நந்தா. இப்படம் தான் சூர்யாவை முழுமையான ஒரு நடிகராக மாற்றியது என்று கூறலாம்.
இப்படத்தில் ராஜ்கிரண், லைலா, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
முதலில் நடிக்கவிருந்த ஹீரோ
இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூர்யா இல்லை என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் அஜித் தானாம்.
அஜித் - பாலா கூட்டணியில் நந்தா படம் உருவாகவிருந்துள்ளது. அதற்கான போஸ்டரை கூட படக்குழு அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியிட்டுள்ளனர். ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் இருந்து அஜித் விலகியுள்ளார்.
அதன்பின் தான் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார் என கூறுகின்றனர். நான் கடவுள் படம் மட்டுமின்றி நந்தா படத்திலும் அஜித் - பாலா கூட்டணி சேராமல் போய்விட்டது.