அஜித் நடிக்கவிருந்த படத்தில் நடித்து வரும் சிம்பு.. தயாரிப்பாளர் கூறிய தகவல்
சிலம்பரசன்
தமிழ் திரையுலகில் தற்போது பிசியாக இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவருடைய நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து கொரோனா குமார், பத்து தல என பல படங்களில் பிசியாக இருக்கும் சிம்பு. இதில் பத்து தல திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த மஃப்டி படத்தின் ரீமேக் ஆகும்.

பத்து தல
ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் சிம்பு நடித்து வரும் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் தானாம்.

முதன் முதலில் அஜித்தை தான், இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க தயாரிப்பாளர் ஞானவேல் யோசித்துள்ளாராம். ஆனால், அதன்பின் சில காரணங்களால் அஜித்துக்கு பதில் சிம்பு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் செய்தோம் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri