சுப்ரமணியபுரம் படத்தை தேர்ந்தெடுத்த நடிகர் அஜித் தானா.. உண்மையை உடைத்த நடிகர் ஜெய்
சுப்ரமணியபுரம்
தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பதித்த படங்களில் ஒன்று சுப்ரமணியபுரம். சசி குமார் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சமுத்திரக்கனி, ஜெய், கஞ்சா கருப்பு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
கிராமத்து கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தை முதன் முதலில் அவருக்கு தேர்ந்தெடுத்து கொடுத்தது நடிகர் அஜித் தானாம்.
அஜித் தேர்ந்தெடுத்த கொடுத்த கதை
ஆம், சுப்பிரமணியம் படத்துடன் சேர்ந்த இன்னும் சில படங்களின் வாய்ப்பு அப்போது ஜெய்க்கு வந்ததாம். அந்த நேரத்தில் குழப்பத்தில் இருந்த ஜெய்யிடம், சுப்பிரமணியம் படத்தின் கதையை தேர்ந்தெடுத்து கொடுத்து நடிக்க சொன்னாராம்
அஜித். அஜித்தை சந்தித்த போது, இந்த விஷயம் நடந்தது என்று ஒரு பேட்டியில் ஜெய் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.