தல அஜித் தான் என்னுடைய ரோல் மாடல்.. தேசிய விருது வென்ற நடிகர் பேட்டி
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில், நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
கலைப்புலி தாணுக்கு, தனுஷ், விஜய் சேதுபதி, ரசூல் பூக்குட்டி, டி.இமான், பார்த்திபன் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திர நடிகர் என்று நாகவிஷால் என தமிழ் திரையுலகை சேர்ந்த பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இதோல் கே.டி படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திர நடிகர் என்று விருதை பெற்ற நாகவிஷால், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, தமிழ் சினிமாவில் உங்களுடைய ரோல் மாடல் யார் என்று கேள்வி எழுந்தது. அதற்கு " எனக்கு தமிழ் சினிமாவில் ரோல் மாடல் தல அஜித் தான் " என்று நாகவிஷால் கூறினார்.