தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது அஜித் கிடையாது! வேறு யார் தெரியுமா.. தல பட்டம் மிஸ் ஆகிருச்சே
அஜித்
பல லட்சம் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பும் கடந்த வாரம் வெளிவந்தது.
அஜித்தின் நடிப்பில் வெளிவந்த தரமான திரைப்படங்களில் ஒன்று தீனா. இப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். இது அவருடைய முதல் படமாகும்.
முதல் ஹீரோ
ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அஜித் கிடையாதாம். நடிகர் டாப் ஸ்டார் பிரஷாந்த் தான் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.
அப்போது பிரஷாந்தின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டது என பிரஷாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் கூறியுள்ளார். ச்ச தல பட்டத்தை மிஸ் பண்ணிட்டாரே.
இந்த தகவலை நடிகர் தியாகராஜன் நமது சினிஉலகம் Youtube சேனலுக்கு பேட்டி அளித்தபோது கூறினார். மேலும் அவர் கூறிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்க :

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
