துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் மோதலுக்கு நடிகர் அஜித் தான் காரணமா?
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித்.
இவர்கள் இருவரும் அவர்களின் அடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். மேலும் அஜித் தனது துணிவு திரைப்பட ஷூட்டிங்கை முடித்து கொண்டு தனது பைக் ரைட்-யை தொடங்கியுள்ளார்.
விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் இன்னும் சில காட்சிகள் மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படம் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது துணிவு திரைப்படமும் வெளியாக இருப்பதை அறிவித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரே நாளில் இந்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகாமல் அடுத்த நாட்களில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையே இப்படங்கள் வெளியாக முக்கிய காரணமே நடிகர் அஜித் தான் என சொல்லப்படுகிறது.
ஆம், அவர் தான் வாரிசு திரைப்படம் வெளியாகும் போதே துணிவு திரைப்படத்தை வெளியிடலாம் என சொன்னதாகவும், விஜய்யின் மார்க்கெட்-யை குறைகவே இப்படி அஜித் செய்ததாகவும் மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை ஆனால் இப்படியொரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரமாண்டமாக கட்டியுள்ள புதிய வீட்டில் மனைவியுடன் குடிபோகும் தனுஷ்

நாடு இதுவரை கண்டிராத விடயமாக மாற்றுவேன்! கண்ணீருடன் சபதமெடுத்த சார்லி கிர்க்கின் மனைவி News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
