முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ! இணையும் பிளாக் பஸ்டர் கூட்டணி..
அஜித்துடன் இணையும் சன் பிக்சர்ஸ் !
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக வெளியான இவரின் வலிமை திரைப்படம்உலகமுழுவதும் ரூ.200 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித். இதற்கிடையே தற்போது அஜித்தின் புதிய கூட்டணி குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அதன்படி தற்போது அஜித்தின் அடுத்த படங்களில் ஒன்றை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அப்படி இந்த கூட்டணி அமைந்தால் முதல்முறையாக அஜித் படத்தை தயாரிக்க இருக்கிறது சன் பிக்சர்ஸ்.
இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை, இது வந்ததியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் ! அதிர்ச்சியளிக்கும் தகவல்..

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
