28வது வருடத்தை எட்டிய அஜித்தின் காதல் கோட்டை படத்தின் முழு வசூல்.. எவ்வளவு தெரியுமா?
நடிகர் அஜித்
அஜித் நடித்த ஹிட் படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு திரைப்படம் காதல் கோட்டை.
கண்ணும் கண்ணும் பார்த்து, பேசி பழகினால் தான் காதல் வரும் என்று இருந்த காலத்தில் பார்க்காமலேயே காதல் என்ற கான்செப்டில் இந்த படம் உருவாகி இருந்தது.
அகத்தியன் இயக்கத்தில் 1996ம் ஆண்டு அஜித்-தேவயானி நடிக்க வெளியான இப்படத்திற்கு தேவா அவர்கள் இசையமைத்திருந்தார்.
வித்தியாசமாக கதைக்களத்தை கொண்டு படம் இயக்கிய அகத்தியனுக்கு இப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது கிடைத்தது.
பாக்ஸ் ஆபிஸ்
படம் வெளியாகி இன்றோடு 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. சிறந்த தமிழ் படம் என்றும் விருது பெற்ற காதல் கோட்டை படம் 250 நாட்கள் சிங்கிள் திரையரங்கில் ஒளிபரப்பாகி வந்தது.
மொத்தமாக இப்படம் ரூ. 12 கோடிக்கு மேல் வசூல் வேட்டையும் நடந்துள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
