தல அஜித் கடைசியாக கலந்து கொண்ட இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சி எது தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
அந்த வகையில் தல அஜித் ரசிகர்களும் இப்படத்தின் அப்டேட்டை கேட்டு வந்த நிலையில் ஒரு வழியாக அஜித்தின் பிறந்தநாள் அன்று First லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக First லுக் போஸ்டர் வெளியாகாது, என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார்.
இந்நிலையில் தல அஜித் கடந்த சில வருடங்களாகவே போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். மேலும் இவர் நடித்த படத்தின் நிகழ்ச்சியில் கூட அஜித் கலந்து கொள்வது இல்லை.
மேலும் தல அஜித் கடைசியாக அவர் நடித்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது அசல் தான்.
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அசல் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தல அஜித் கடைசியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.