மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்.. என்ன பிரச்சனை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63ல் நடிக்கவுள்ளார்.
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்
இந்த நிலையில், ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ள நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளாராம்.
என்ன பிரச்சனை
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் தற்போது நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என கூறப்பட்ட நிலையில், அதெல்லாம் உண்மையில்லை, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்தரா கூறியுள்ளார்.
மேலும் வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்காக செல்லவிருப்பதன் காரணமாக, அதற்குமுன் இந்த வழக்கமான மருத்துவ பரிசோதனையை அஜித் மேற்கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.
விரைவில் அவர் வீடு திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் பல அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You may Like This Video