அஜித் - வினோத் இணையும் AK 61 படத்தின் கதை இதுதான்.. படப்பிடிப்புக்கு முன்பு கசிந்த ரகசியம்
வலிமை படத்தை தொடர்ந்து அஜித் - எச். வினோத் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள திரைப்படம் AK 61.
மீண்டும் இணையும் கூட்டணி
நேர்கொண்ட பார்வை, வலிமை என தொடர் வெற்றிக்கு பிறகு அஜித் - எச். வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணி மீண்டும் AK 61 படத்திற்காக அமைந்துள்ளது.
வலிமை படத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இதுவரை AK 61 படத்தின் கதாநாயகி யார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
Ajith-க்கு ஜோடியாகும் Thalapathy Vijay-ன் ஜோடி - #AK61 Mass Update
AK 61 படத்தின் கதை
இந்நிலையில், AK 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதன்படி, AK 61 படம் வாங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாக இருக்கும் என்று அதில் கூறப்படுகிறது.
இதனை வைத்து பார்க்கும் பொழுது, மங்காத்தா சாயலில் AK 61 இருக்கும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் AK 61 திரைப்படம் எப்படி அமையப்போகிறது என்று.
அஜித்தின் வலிமை திரைப்படம் இந்த ஒரு இடத்தில் படு தோல்வியா?- ரசிகர்கள் ஷாக்