அஜித் உருக்கமாக வைத்த வேண்டுகோள்! என்னை ப்ரமோட் பண்ணாதீங்க, இதை பண்ணுங்க..
நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் என்ற டீம் உரிமையாளராக இருக்கும் அவர் தனது டீம் உடன் பல முன்னணி ரேஸ்களில் பங்கேற்று வருகிறார்.
சில பிரிவுகளில் அவரது டீம் பரிசுகளையும் பெற்று இருக்கிறது. பரிசு பெற மேடைக்கு செல்லும்போதெல்லாம் அஜித் தனது கையில் இந்திய கோடியை ஏந்தி செல்கிறார்.
என்னை promote செய்யாதீங்க
அஜித் மீடியாவிடம் பேசும்போது "இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றி ப்ரொமோட் செய்யுங்க. என்னை promote செய்யாதீங்க" என கூறி இருக்கிறார்.
"மோட்டார் ஸ்போர்ட்ஸ் எவ்வளவு கஷ்டம் என மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் நேரில் பார்ப்பதை மக்களுக்கு சொல்லுங்கள்."
"எவ்வளவு கடினம், இதில் fun எதுவும் இல்லை. ஒருநாள் நிச்சயம் இந்திய டிரைவர்கள் F1 சாம்பியன் ஆவார்கள். அதனால் motorsport-ஐ promote பண்ணுங்க" என அஜித் கூறி இருக்கிறார்.
அஜித் பேசி இருக்கும் வீடியோவை பாருங்க.