எல்லாரும் அரசியலுக்கு வந்துட்டா.. அஜித் பல வருடங்களுக்கு முன்பே சொன்ன கமெண்ட்
நடிகர் விஜய் அரசியலில் குதித்து இருக்கிறார் என்பது தான் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்படும் டாபிக்.
அவருக்கு சினிமா துறையினர் ஆதரவு தெரிவிப்பது ஒருபக்கம் இருந்தாலும், எம்ஜிஆர் போல அவர் அரசியலில் ஜெயித்து CM ஆக முடியுமா இல்லையா என விவாதமே சமூக வலைத்தளங்களில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அரசியல் பற்றி அஜித்
இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அஜித் அரசியல் பற்றி தனது கமெண்ட் கூறி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
"அரசியலுக்கு வருவீர்களா என்பது தான் என்னிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. நம்மை guide செய்ய தலைவர்கள் வேண்டும். "
"ஆனால் நாடு நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாரும் வந்து அரசியலில் நுழைந்தால். அது நல்ல அறிகுறி அல்ல. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் அவரவர் கடமையை செய்தாலே நாடு நல்லா இருக்கும்."
"அரசியலில் இறங்கி தான் ஒரு விஷயத்தை சரி செய்யவேண்டும் என்பதில்லை" என அஜித் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.