கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா

By Kathick Jul 06, 2022 12:15 PM GMT
Report

பரிசு கொடுத்த அஜித் குமார்

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தின் வெற்றிக்காக அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு விலைஉயர்ந்த காரை பரிசாக வழங்கினார் கமல் ஹாசன்.

ஆனால், கமல் ஹாசனுக்கு முன்பே பல வருடங்களுக்கு முன் இந்த விஷயத்தை செய்துள்ளார் நடிகர் அஜித். ஆம், அஜித் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று வாலி.

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா | Ajith Kumar Gifted Car To His Director

இப்படத்தை இயக்கியவர் எஸ்.ஜே. சூர்யா என்பதை நாம் அறிவோம். இப்படத்தின் துவக்கத்தில் தன்னுடைய இயக்குனர் நடந்து செல்லக்கூடாது என்று பைக் வாங்கி கொடுத்தாராம் அஜித்.

இதன்பின், படத்தை பார்த்துவிட்டு புதிய காரும் வாங்கி தந்துள்ளாராம். இந்த தகவலை சமீபத்தில் ஒரு மேடையில் எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்துகொண்டுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US