அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம்.. வெளிவந்த விவரம்
குட் பேட் அக்லி
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
இதில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் இசை ஜி.வி.பிரகாஷ் தான்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படத்தின் டீஸர் மற்றும் ஃபஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
ரன்னிங் டைம்
இந்த படத்தின் 2வது சிங்கிள் யூடீயூபில் வெளியாகி 11 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 18 நிமிடங்கள் என கூறப்படுகிறது.
சென்சார் குழுவினரிடம் சென்றுவந்த பிறகு சில நிமிடங்கள் குறையலாம் என கூறப்படுகிறது.