அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா?... கசிந்த தகவல்
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடித்து முடித்த திரைப்படம் குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க தெலுங்கில் புஷ்பா படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார்.
இதில் அஜித்துடன் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் ராகுல் தேல், யோகி பாபு, டாம் சாக்கோ, அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.
டிரைலர்
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவரும் நிலையில் இதுவரை படத்தில் இடம்பெற்ற 2 பாடல் புரொமோக்கள் வெளியானது.
தற்போது சமூக வலைதளங்களில் வலம்வரும் தகவல் என்னவென்றால் வரும் ஏப்ரல் 3ம் தேதி குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
