விடாமுயற்சி படத்திற்காக டிராகன் தள்ளி போனதா?.. ஃபேட் மேன் ரவீந்திரன் அதிரடி பதில்
டிராகன்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து ஏஜிஎஸ் எடுத்த இரண்டாவது திரைப்படம் தான் டிராகன்.
லவ் டுடே எப்படி உலகளவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்ததோ, அதே போல் இப்படமும் சாதனை படைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.
அந்த வகையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த Dragon திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன் பிரதீப் 'தல வந்தா தள்ளிப் போய் தான் ஆகனும்" என்று சொல்லிருப்பார்.
ஓபன் டாக்
இந்நிலையில், இப்படத்தில் நடித்த ஃபேட் மேன் ரவீந்திரன் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " பிரதீப் ரங்கநாதன் தற்போது அடைந்துள்ள உச்சத்தை, கடந்த 25, 30 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டு வருகிறார் அஜித். அஜித் குமார் என்றால் அது ஒரு பிராண்ட்.
அந்த பிராண்ட்க்குத்தான் ஒதுங்கிப் போனது. விடாமுயற்சி படத்தை கையாள்வது டிராகன் படத்தை கையாளுவதை விட 5 மடங்கு பெரிய விஷயம்" என்று கூறியுள்ளார்.