54 வயதை எட்டிய பத்மபூஷன் நடிகர் அஜித் குமார்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
மேலும் கார் ரேஸில் மாபெரும் வெற்றியடைந்தார். இதை தவிர்த்து பத்மபூஷன் விருதும் அஜித்திற்கு வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவிற்கே இது மிகப்பெரிய பெருமையாக அமைந்தது.

மே 1 என்றால் உழைப்பார்கள் தினம் என்பதை நாடே அறியும். ஆனால் தமிழ்நாட்டில் உழைப்பாளர்கள் தினத்தோடு சேர்த்து அஜித் பிறந்தநாளும் மாபெரும் அளவில் ரசிகர்களால் கொண்டாப்படும்.
அஜித்தின் பிறந்தநாள்
இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்திற்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அஜித்தின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 350 கோடி முதல் ரூ. 400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் கடைசியாக நடித்து குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியிருந்தார். அடுத்த படத்திற்காக ரூ. 175 கோடி சம்பளம் வாங்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள விவரம் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
இதுவரை ஒரு வெற்றி கூட இல்லை: தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..பத்திரனாவும் ஒரு காரணம் IBC Tamilnadu
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri