இனி இது போன்று நடக்கக் கூடாது.. கண்டனம் தெரிவித்த அஜித் குமார்!
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கண்டனம்
இந்நிலையில், நடிகர் அஜித் கெரியரில் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, பத்ம பூஷன் விருது வாங்கி உள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நடிகர் அஜித் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், " இனி இது போன்று ஒரு செயல் நடக்கக் கூடாது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்.
எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். அனைவரும் அமைதியாக வாழ வேண்டும். இதனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.