யூடியூப் சேனல் தொடங்கிய அஜித் குமார்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி.
இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
ஹேப்பி நியூஸ்
தற்போது, அஜித் தீவிரமாக ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் நிலையில், 'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது.
அஜித் குமாரின் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

ஏ. ஆர் ரஹ்மான் பானியில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவிமோகன்- வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை Manithan
