ரஜினி கையால் அடிவாங்க ஆசைப்படும் அஜித்.. மனம் திறந்து பேசிய AK
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின.
இதில் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் செய்து, அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக மாறிவிட்டார். இதனால் மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் இணைந்துள்ளார்.
AK 64 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடிகர் அஜித் கடந்த சில வருடங்களாக சினிமா சார்ந்த எந்த ப்ரோமோஷன் விழாவிலும் கலந்துகொள்வது இல்லை. ஆனால், மங்காத்தா படத்தின் சமயத்தில் Print மீடியாவுக்கு பேட்டிகள் கொடுத்துள்ளார்.
அஜித் ஓபன் டாக்
அப்போது ரஜினிகாந்த் குறித்தும், மங்காத்தா வெற்றியை அவருக்கு சபர்ப்பித்தாகவும் அஜித் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.
"எனக்கு நம்பர் 1, நம்பர் 2 இதிலெல்லாம் ஈடுபாடு இல்லை. அந்த எண்ணங்களும் மனதில் இல்லை. தமிழ் சினிமாவின் துரோணாச்சாரியராக ரஜினி சாரை நான் பார்க்கிறேன். துரோணாச்சாரியாரின் அர்ஜுனனாக மக்கள் யாரை ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் ஏகலைவன் போல் இருக்கவே ஆசைப்படுகிறேன். சூப்பர்ஸ்டாரை நான் தூரத்தில் இருந்துகொண்டே ரசித்தபடி, படங்கள் பண்ண ஆசைப்படுகிறேன். ரஜினி சாய் நடிக்கவேண்டும், அவை நடிக்கும் படத்தில் நான் வில்லனாக நடிக்கவேண்டும். அவர் கையால் நான் ஆதி வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இது என்றைக்கு நடக்கிறதோ அன்று எனது சினிமா பயணம் முழுமையை அடைந்ததாக சந்தோஷப்படுவேன். இதுதான் என் லட்சியம். மங்காத்தா படத்தின் மாபெரும் வெற்றியை ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன்". என அஜித் கூறியுள்ளார்.
சமீபத்தில் மங்காத்தா படம் வெளிவந்து 14 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில், அஜித்தின் இந்த பேட்டி இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.