இதனால் தான் நான் வெளியே செல்வதில்லை.. அஜித் வெளிப்படையாக சொன்ன காரணம்
நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கார் ரேஸ் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய அவர் சில கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று வந்திருந்தார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது அஜித் அளித்திருக்கும் ஒரு பேட்டி வைரலாகி இருக்கிறது. அதில் தனது ரசிகர்கள் பற்றி அஜித் ஒரு விஷயம் கூறியிருக்கிறார்.

ஏன் வெளியில் செல்வதில்லை..
"ரசிகர்கள் என் மீது பொழியும் அன்புக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். ஆனால் அதே அன்பு காரணமாகத்தான் நான் குடும்பத்துடன் வெளியில் செல்வதில்லை."
"என் மகனை கூட நான் பள்ளிக்கு கொண்டு சென்று விட முடியாத நிலை இருக்கிறது" என அஜித் கூறியிருக்கிறார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    