மாஸாக டப்பிங் பேசும் அஜித் குமார்.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்
துணிவு
அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார். பிக் பாஸ் சிபி, அமீர், பாவனி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
பேங்க் கொள்ளையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.
டப்பிங்
கடந்த சில நாட்களாக இப்படத்தில் நடித்திருந்த முக்கிய கதாபாத்திரங்கள் டப்பிங் பேசி வந்த நிலையில், இன்று துணிவு படத்திற்காக அஜித் டப்பிங் பேசியுள்ளார்.
அஜித் டப்பிங் பேசும் பொழுது அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் முதல் முறையாக வெளிவந்து தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
