முன்னணி நடிகரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் அஜித்.. AK 64 படத்தின் மாஸ் அப்டேட்
குட் பேட் அக்லி
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
Youtube-ல் 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனையும் படைத்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கப்போகும் அவருடைய 64வது படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
AK 64
ஆனால், விஷ்ணு வர்தன், சிறுத்தை சிவா, பிரஷாந்த் நீல் போன்ற இயக்குநர்களின் பெயர்களும் இதில் அடிபட்டு வருகிறது. இந்த நிலையில், முன்னணி நடிகரும், பிரபல இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் தான் AK 64 திரைப்படம் உருவாகப்போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்துடன் இட்லி கடை படம் வெளியாவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த ரிலீஸ் தேதியில் இருந்து இட்லி கடை தள்ளிப்போய்விட்டதாம். மேலும் அஜித்தின் அடுத்த படத்தை தனுஷ் இயக்கப்போவதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் துவங்கும் என்றும் சோசியல் மீடியாவில் பேச்சு எழுந்துள்ளது.
மேலும், இப்படத்தை தனுஷின் Wunderbar நிறுவனம் தயாரிக்கும் என்றும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan
