சூர்யாவின் கஜினி படத்தில் முதலில் கமிட்டான போது அஜித் எடுத்த போட்டோ ஷுட்- இதுவரை பார்க்காத ஒன்று
கஜினி படம்
ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா-அசின் 3 பேரின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்தது கஜினி.
கடந்த 2005ம் ஆண்டு வெளியான இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.
தமிழகத்தில் வசூல் சாதனை படைத்த கஜினி திரைப்படத்தை பாலிவுட்டின் டாப் நாயகன் அமீர்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியிலும் இயக்கியிருந்தார். இப்படி மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை பல முன்னணி நடிகர்கள் நடிக்க மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் போட்டோ ஷுட்
தற்போது அஜித்தின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படத்தின் போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது.
அதாவது முருகதாஸின் கஜினி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அஜித் போட்டோ ஷுட்டும் நடத்தியுள்ளார், பின்பு சில காரணங்களால் வெளியேறியிருக்கிறார்.
தற்போது அந்த படத்திற்காக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதோடு அஜித் இந்த படத்தை மிஸ் செய்திருக்க கூடாது என்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
