ரசிகர்களை சந்தித்து மகிழ்ச்சியாக உரையாடிய அஜித்.. வைரலாகும் வீடியோ
அஜித்
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம்.. அயோத்தியில் முதன் முதலில் நடிக்கவிருந்த ஹீரோ சசி குமார் இல்லை, வேறு யார் தெரியுமா
வைரலாகும் வீடியோ
அங்கிருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல் தற்போது ஒரு வீடியோ காட்டு தீ போல் பரவி வருகிறது.
நடிகர் அஜித் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகியுள்ளது. இதில் அனைவரையும் பண்புடன் அஜித் நடத்தும் விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதோ அந்த வீடியோ..
Exclusive : Latest Video of #AK ?#VidaaMuyarchi pic.twitter.com/9qbS3Z6fZr
— Ragav シ︎ (@Ragav_Tweetz) December 17, 2023