அஜித்தை நேரில் சந்தித்த பிரபல காமெடி நடிகர்! லேட்டஸ்ட் போட்டோ வைரல்
நடிகர் அஜித் தற்போது தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறார். தற்போது காமெடி நடிகர் அம்பானி ஷங்கர் தான் ஜி படத்திற்கு பிறகு அஜித்தை சந்தித்து இருப்பதாக கூறி போட்டோ வெளியிட்டு உள்ளார்.
அஜித் 61
வலிமை படம் கலவையான விமர்சனங்கள் பெற்று இருந்தாலும் நல்ல வசூலை தான் பெற்றது என கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் நஷ்டம் என ஒரு பத்திரிகையாளர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறம் இருக்க அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி மீண்டும் அஜித்61 படத்திற்காக இணைய இருக்கிறது.
இந்த படத்திற்காக வெள்ளை முடி, நீண்ட தாடி என தனது கெட்டப்பை அஜித் வித்யாசமாக மாற்றி இருக்கிறார்.
லேட்டஸ்ட் போட்டோ
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் அம்பானி ஷங்கர் அஜித்தை நேரில் சந்தித்து இருக்கிறார். அவரை ஜி படத்திற்கு பிறகு சந்தித்து இருப்பதாக குறிப்பிட்டு அவர் போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.
அம்பானி ஷங்கர் தற்போது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் சொந்தமாக youtube சேனல் தொடங்கி அதில் காமெடியான பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டோ இதோ..