கங்குவா ட்ரைலரை பார்த்த அஜித்.. என்ன சொன்னார் தெரியுமா
கங்குவா
நாளை வெளிவரவிருக்கும் கங்குவா படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

ட்ரைலரை பார்த்த அஜித்
சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு இருந்தனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், ட்ரைலரை நடிகர் அஜித் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என இயக்குனர் சிவாவிடம் கூறியுள்ளார். இதனை இயக்குனர் சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அஜித் - சிவா கூட்டணியில் இதுவரை வெளிவந்த 4 திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. கங்குவா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூட, அஜித் - சிவா இடையே உள்ள உறவு குறித்து நடிகர் சூர்யா பேசியிருப்பார்.

மேலும், தான் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்க காரணங்களில் ஒன்றாக இருக்கும் அஜித் சாருக்கு நன்றி தெரிவித்து இருந்தார் இயக்குனர் சிவா. 4 திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக பயணித்துள்ள நிலையில், அடுத்ததாக மீண்டும் சிவா - அஜித் கூட்டணியில் படம் உருவாகவுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri