அஜித்தின் மேனேஜர் திடீரென போட்ட ட்விட்! தில் ராஜுவுக்கு பதிலடியா?
வாரிசு vs துணிவு
விஜய்யை விட அஜித் பெரிய ஸ்டார் இல்லை, அதனால் வாரிசு படத்திற்க்கு தான் அதிக தியேட்டர் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது தற்போது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதற்கேற்றார் போல வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
ஆனால் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் அஜித் பங்கேற்கப்போவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. நல்ல படத்திற்கு அதுவே தான் விளம்பரம் என அஜித் சமீபத்தில் கூறி இருந்தார்.

அஜித் மேனேஜர் பதிவிட்ட ட்விட்
இந்நிலையில் தற்போது அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா ஒரு ட்விட் பதிவிட்டு இருக்கிறார். அதில் அஜித் பைக் ரைடு சென்ற ஒரு போட்டோவை போட்டு "No guts no glory !!!" என பதிவிட்டு இருக்கிறார்.
தில் ராஜுவுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு பதிவை அவர் போட்டாரா? என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
No guts no glory !!! pic.twitter.com/MI2cxgVwbp
— Suresh Chandra (@SureshChandraa) December 16, 2022