மங்காத்தா ரீரிலிஸ் எப்படி இருக்கு, ஒரு சிறப்பு பார்வை
மங்காத்தா
இந்த படத்தை அஜித் ரசிகர்கள் தாண்டி, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடி தீர்த்த படம்.
2011-ல் வெளியான இப்படம் அஜித், அர்ஜுன் திரிஷா, வைபவ், ஆண்ட்ரியா, அஞ்சலி, மகத், ப்ரேம்ஜி என பலர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தின் யுவன் இசையில் வெளிவந்து 85 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பட்டையை கிளப்பிய படம்.
தற்போது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் ரீரிலிஸ் செய்ய, எப்படி வந்துள்ளது, அதற்கு முன்பு மங்காத்தா கதை சின்ன ரீவெண்ட் ஆக பார்ப்போன்.

கதை என்ன
அஜித் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு என்கவுண்டர் செய்து சஸ்பெண்ட் ஆகிறார்.
அந்த சமயத்தில் IPL மேட்ச் மூலம் ரூ 500 கோடி பணம் வெளியே வருகிறது. இந்த கும்பலை எப்படியாவது பிடிக்க வேண்டும் என அர்ஜுன் & கோ டீம் தயாராகிறது.
அஜித்தோ இந்த பணத்தை 4 சின்ன பசங்க கொள்ளையடிக்க ப்ளான் செய்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு, அவர்களுடன் நட்பாகிறார், அப்படி நட்பாகி, அவர்கள் ப்ளானை தன் ப்ளானாக மாற்றி அந்த 500 கோடியை கொள்ளை அடிக்கின்றனர்.
ஆனால், அந்த 500 கோடி பணத்தை மகத், ப்ரேம் ஜி யாருக்கும் தெரியாமல் எடுத்துபோக, பிறகு என்ன ஆனது என்பதே மங்காத்தா படத்தின் கதை.

மங்காத்தா ஸ்பெஷல்
மங்காத்தா படத்தின் ஸ்பெஷலே படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் யாருமே நல்லவர்கள் இல்லை, எல்லோரும் கெட்டவர்கள், இதில் அஜித் மிகவும் கெட்டவர் இது தான் கான்செப்ட். ஆனால், அஜித் எப்படி இந்த படத்தை ஓகே செய்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி தான் அப்போது.
ஏனெனில் அஜித்தின் 50வது படம், கோவா தோல்விக்கு பிறகு வெங்கட் பிரபுக்கு வாய்ப்பு கொடுக்கிறார். எல்லோரும் அஜித்தின் முடிவை முட்டாள்தனமாக பார்த்தனர், ஏனெனில் அந்த சமயத்தில் சென்சேஷ்னல் இயக்குனராக இருந்த கௌதம் மேனன் படத்தை மறுத்துவிட்டு, வெங்கட்பிரபுக்கு அஜித் வாய்ப்பு கொடுக்கிறார்.

ஆனால், அஜித்தின் கணிப்பு துளிக்கூட மிஸ் ஆகவில்லை என்பதே உண்மையானது, என்ன தான் வாலி படத்தில் வில்லன் ரோலில் மிரட்டியிலிருந்தாலும், இதில் தன் காதலியின் அப்பாவை அவள் கண்முன்னே தள்ளிவிடும் மிக மோசமான வில்லனாக அஜித் மிரட்டியிருப்பார்.
இன்றும் அஜித் இப்படி எப்போது மீண்டும் வருவார் என்பதே அஜித் ரசிகர்களின் ஏக்கமாக அமைய, அதுவே மங்காத்தா இன்றும் இப்படி கொண்டாட ஸ்பெஷலாக அமைந்துள்ளது.
ரீ ரிலிஸ் எப்படி
மங்காத்தா சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை கையில் எடுக்கிறது என்றாலே சொல்லவா வேண்டும், சும்மா Picture Quality டாப் ஆக உள்ளது, எதோ இப்போது எடுத்த படம் போல் அத்தனை க்ளியராக திரையில் படம் உள்ளது.
இன்று லியோ டைட்டில் கார்ட், கூலி டைட்டில் கார்ட், GBU டைட்டில் கார்ட் என என்ன வந்தாலும் OG டைட்டில் கார்ட் மங்காத்தாவில் வரும் போது 2கே ரசிகர்கள் கண்களில் அத்தனை ஆச்சரியம் ஆர்பரிப்பும் காணமுடிகிறது.

அதை தொடர்ந்து விளையாடு மங்காத்தாவுக்கு மொத்த திரையரங்கும் ஸ்கிரீன் முன்பு தான் நிற்கிறது, ஆட்டம் பாட்டம் என தொடக்கமே அமர்க்களம் தான்.
பிறகு ஜாலியான அஜித், திரிஷாவிப் லவ்வர் அஜித் என விண்டேஜ் மோட்-யை ரசித்த ரசிகர்கள், அஜித் ப்ளன் போடும் போது பின்னணியின் யுவன் இசை ஒலிக்க, தியேட்டரே கான்செர்ட் ஆக மாறுகிறது. இதெல்லாம் விட, விநாயக் இரண்டு வண்டியையும் பிரிச்சாச்சு, என அஷ்வின் சொல்ல, அஜித் வீலிங் அடிக்க ரசிகர்கள் யாரும் தரையில் நிற்கவில்லை, ஏதோ தாங்களே திரையில் வீலிங் செய்வது போல் கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
அதை தொடர்ந்து அஜித் செஸ் விளையாண்டு கொண்டே ஒவ்வொருவரையும் முடிக்க ப்ளான் செய்யும் இடம், தியேட்டர் ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்க ஆரம்பித்துவிட்டது, அப்போ அந்த மீதி பணம் என அஜித் ஸ்கிரீன் முன் வர, ரசிகர்கள் இது போதும் தல எனக்கு என்ற மனநிலைக்கு வந்ததை பார்க்க முடிந்தது.

இரண்டாம் பாதி தொடங்கியதுமே, அம்பானி பரம்பரை சொல்லவா வேண்டும், 10,000 வால சரவெடி போல் ரசிகர்கள் விசித் சத்தம் காதை பதம் பார்த்துவிட்டது.
அஜித்தின் வில்லத்தனம் இரண்டாம் பாதியில் ரசிகர்கள் ரசித்து பார்க்க, அந்த கிளைமேக்ஸ் டுவிஸ்ட் எல்லோருக்குமே தெரிந்தது தான், ஆனால் இண்டர்நெட் வளராத காலத்தில் எத்தனை சுவாரஸ்யமாக ரசிகர்கள் பார்த்தார்களோ, அதே பரபரப்பு தான் இப்போதும். படத்தின் மிகப்பெரிய பலம் யுவன் இசை தான்.
தற்போது எப்படி அனிருத் ரஜினிக்கு இறங்கி செய்கிறாரோ, அப்படி யுவன் அஜித்திற்கு செய்த ப்ளாஸ்ட் சம்பவம் என்றால் அது மங்காத்தா தான், இன்றும் மங்காத்தா தீம் இசை தான் பல தியேட்டர் ஸ்கிரீன் ஓபன் செய்ய பயன்படுத்துகிறார்கள் என்பதே மங்காத்தா இசைக்கு கிடைக்கும் மரியாதை.
அதே போல் சக்தி சரவணன் இசை, ப்ரவீட் எடிட்டிங், ஸ்டெண்ட் சில்வா சண்டைக்காட்சிகள் என அஜித்திற்கு 50வது படத்தில் ஒரு மகுடம் செய்து அதில் ஒரு வைர கல்லை பதித்துள்ளார் வெங்கட் பிரபு. மொத்தத்தில் மங்காத்தா சொல்ல வருவது ஒன்றே ஒன்று, அஜித் ரசிகர்கள் சொல்ல வருவதும் ஒன்றே ஒன்று தான், இது தான் தல நீங்க, மீண்டும் இப்படி வாங்க என்பதே.