80 கோடி வசூல் செய்த அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
மங்காத்தா
நடிகர் அஜித்தின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என பட்டியல் எடுத்தால், கண்டிப்பாக மங்காத்தா படம் அதில் இடம்பெறும்.

இன்னும் சொல்லப்போனால் மங்காத்தா தான் பல அஜித் ரசிகர்களுக்கு டாப்பில் இருக்கும். அந்த அளவிற்கு மாபெரும் மாஸ் சம்பவத்தை தமிழ் சினிமாவில் செய்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, வைபவ், அஞ்சலி, பிரேம்ஜி, லட்சுமி ராய் என பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்த சமயத்தில் உலகளவில் ரூ. 80 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரீ ரிலீஸ்
இந்த நிலையில், மங்காத்தா படத்தை வருகிற ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். அதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.
Mankatha daa!🔥 The Kingmaker is back to meet you all ♠️ #Mankatha Re-releasing from January 23 in theatres near you!💰#AjithKumar @vp_offl @thisisysr @akarjunofficial @trishtrashers @actor_vaibhav @Premgiamaren @AshwinKakumanu @MahatOfficial @andrea_jeremiah @iamlakshmirai… pic.twitter.com/duMk855DrH
— Sun Pictures (@sunpictures) January 4, 2026